If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

Main content

Ping pong ball launcher introduction

This video highlights the projectile (ping pong ball) launcher. Created by Karl Wendt.

Want to join the conversation?

Video transcript

இந்தக் காணொளியில் ஏவுகணை செலுத்துதலை அறிமுகம் செய்யப் போகிறோம். அடுத்தடுத்த இரண்டு காணொளிகளில் ஏவுகணையை எப்படிக் கட்டமைப்பது என்று பார்க்கப் போகிறோம். ஆனால், ஒரு ஏவுகணையைக் கொண்டு என்னென்ன செய்யமுடியும் என்பதை முதலில் பார்க்கப் போகிறோம். ஏவுகணையை நான்காம் நிலைக்குக் கொண்டு வந்து 60 டிகிரி கோணத்தில் நிறுத்தப் போகிறோம். அடுத்து பிங் பாங் பந்தினை நேரடியாக தொட்டிக்குச் செலுத்தப் போகிறோம். இந்தப் பக்கம் ஒரு விதமாக உந்தித் தள்ளும். ஆனால் அது எப்படி என்பதை அடுத்த காணொளியில் காண்போம். ஏவுகணையை எப்படி இயக்குவது என்பதைக் கணக்கிட உதவி புரிகிறது இந்தச் செலுத்தி. ஏவுகணையை எப்படித் துல்லியமாகச் செலுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள இது உதவிகரமாக இருக்கும். பலவிதமான ஏவுகணைகளை எப்படிப் பல்வேறு விதமாகச் செலுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிங் பாங் பந்துகள் அளவிற்கு இந்த முரட்டு துணியைச் சிறப்பாக செலுத்த முடியாது. இந்தக் காகிதப் பந்தையும் துல்லியமாகச் செலுத்த முடியாது. இதுபோன்றவற்றைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்ள செலுத்தி உதவியாக இருக்கும். ஏவுகணையைச் செலுத்துவதற்குரிய கோணத்தைக் கணக்கிட்டதும் அதன் தன்மை என்ன என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு இந்தக் கேன்களை அடுத்தடுத்து மோதி விழத் தட்ட முடியும். அதற்குரிய துல்லியமான கோணத்தை நம்மால் கணக்கிட இயலும். இப்போது ஒரு கோக் கேன் மீது மோதுவோம். பல ஏவுகணைகளை ஒன்றாக இணைத்து வைத்திருப்பது நல்லதாயிற்று. இது கணக்கிட ஏதுவாக இருக்கும். இந்தத் தொகுப்பில் இருந்து ஒரு செலுத்தியை எடுத்து எப்படிச் செலுத்துவது என்பதைப் பார்ப்போம். இதிலிருந்து பிங் பாங் பந்துகளைப் பெற முடியுமா என்று பார்ப்போம். நமக்கு செலுத்தியைப் பார்க்க வேண்டும் என்றால் அடுத்த இரண்டு காணொளிகளைத் தான் பார்க்க வேண்டும்.